Wifi இன்டர்நெட் வேகத்தை இரட்டிப்பாக்க... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

Fri, 13 Sep 2024-5:32 pm,

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நால் அதிகரித்து வருகின்றது. சிறிது நேரம் கூட இன்டர்நெட் வேகம் குறைந்தால் கூட நமது அனைத்து வேலைகளும் நின்றுவிடும் அப்பாயம் உள்ளது. ஏனெனில், சாதரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பள்ளி மாணவர்கள், அலுவலக பணியில் உள்ளவர்கள்,  மிகப்பெரிய வர்த்தகர்கள் வரை, உலகமே டிஜிட்டல் மயமாகி விட்டது.

 

இணைய வேகத்தை அதிகரிக்க: உங்கள் இண்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக இருந்தால், கவலைப்பட வேண்டாம். அவ்வாறு ஏன் நடக்கிறது, அதை எவ்வாறு சரிசெய்வது  என்பதை அறிந்து கொள்ளலாம். சில எளிய முறைகள் மூலம், உங்கள் வைஃபையை முன்பை விட வேகமாக செயல்படச் செய்யலாம்.

 

திசைவிக்கு அருகில் வேலை செய்யுங்கள்: உங்கள் வைஃபை ரூட்டர் உங்கள் கணிணி அல்லது லேப்டாப் வைத்திருக்கும் இடத்தில் வெகு தொலைவில் இருக்கலாம். இது தவிர, ரூட்டர் அமைந்துள்ள அறையில் இருந்து சமிக்ஞை சரியாக கிடைத்தா வண்ணம், இடையில் இருக்கும் கதவு மூடப்பட்டுள்ளதா என சோதிக்கவும். கதவை திறந்து வைத்திருந்தால், இணைய சமிக்ஞை உங்கள் தொலைபேசி அல்லது கணினியை சரியாகச் சென்றடையும்.

 

திசைவியை உயரமான இடத்தில் வைக்கவும்: பொதுவாக பலர் வைஃபை ரூட்டரை மேஜையில் அல்லது கீழே வைத்திருப்பார்கள். இது இண்டர்நெட் வேகத்தை பாதிக்கும். Wi-Fi திசைவி எப்போதும் சற்று உயரமான இடத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். சிக்னல்கள் எப்பொழுதும் கீழ்நோக்கிப் பரவுகின்றன. எனவே, ரூட்டரை மேலே வைத்தால், கீழே உள்ள பெரும்பாலான இடங்களில் நல்ல வேகம் கிடைக்கும்.

 

சிக்னல் வலிமையை மேம்படுத்த: உங்கள் வைஃபையை ரீஸ்டார்ட் செய்யவில்லை என்றால்,  அது இணைய வேகத்தை பாதிக்கலாம். வைஃபை வேகத்தை அதிகரிக்க, அதை ஆன் மற்றும் ஆஃப் செய்ய முயற்சிக்க வேண்டும். இது சிக்னல் வலிமையை மேம்படுத்துகிறது.  இதனால் வேகம் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

ரூட்டர் கருவியின் நிலை: உங்கள் வைஃபை இண்டநெட் கருவி ஏதேனும் காகிதம் அல்லது துணி போன்றவற்றினால் மறைக்கப்பட்டு இருக்கலாம். இதன் காரணமாக சிக்னலை சரியாக அனுப்ப முடியாமல் இண்டநெட் வேகம் பாதிக்கப்படும்.

 

இண்டர்நெட் வேகத்தை சரிபார்க்கவும்: மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை நீங்கள் முயற்சி செய்து, உங்கள் இணையம் இன்னும் மெதுவாக இயங்கினால், இண்டர்நெட் வேகத்தை அளவிட உதவும் செயலி மூலம்  வேகத்தை சோதித்து, அதில் குறைபாடு இருந்தால், உங்கள் சர்வீஸ் ப்ரொவைடரை தொடர்பு கொள்ளவும்.

 

வைஃபை கருவியை மேம்படுத்த வேண்டும்: வைஃபை சிறந்த முறையில் செயல்பட, வைஃபை கருவியை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டும்.  உங்கள் சர்வீஸ் ப்ரொவைடரை அழைத்து வைஃபை கருவியை மேம்படுத்தும் தேவை உள்ளதா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திசைவியின் செட்டிங்கஸை மாற்றவும்: உங்கள் தொலைபேசி அல்லது கணினியின் வைஃபை செட்டிங்க்ஸ் பிரிவுக்கு செல்ல வேண்டும். அதில் அட்வான்ஸ்டு செட்டிங்க்ஸ் கிளிக் செய்வதன் மூலம் சேனலை மாற்றலாம். சேனலை மாற்றிய பிறகு,  அதனை சேவ் செய்து, பின்னர் ரூட்டரை அணைத்து, பின்னர் மீண்டும் ஆன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இணையம் வேகம் பெறலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link