ரூ.6000 விலையில் சூப்பரான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! மிஸ் பண்ணிடாதீங்க!
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ ஸ்பார்க் கோ 2023 இந்திய சந்தையில் வெறும் ரூ.6,999 விலைக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதவிர டெக்னோ ஸ்பார்க் தொடர் தனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்டையும் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த மொபைலானது 16.66 cm டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, தோராயமாக 6.55 இன்ச் அளவு ஆகும். மேலும் இது ஒரு ஹெச்டி ப்ளஸ் தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மொபைலானது சந்தையில் பிரபலமாக இருக்கும் போகோ சி 50 மற்றும் ரெட்மி ஏ1 ஆகியவற்றுக்கு சிறந்த போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மொபைலை நீங்கள் சில்லறை விற்பனை கடைகளில் வாங்கிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.