ஜனநாயகத்தின் ஆலயம்! இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு சுற்றுலா செல்வோமா?
புதிய பாராளுமன்ற கட்டிடம் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது
பழைய பாராளுமன்ற கட்டிடத்தை விட சுமார் 17 ஆயிரம் சதுர மீட்டர் பெரியது
புதிய பாராளுமன்ற கட்டிடம் நான்கு மாடிகளுடன் நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டது
அறிவு வாயில், சக்தி வாயில், கடமை வாயில் என பொருள்படும், கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார் என்ற பெயர்களில் 3 கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன
எம்.பி.க்கள் மற்றும் பிற விஐபி விருந்தினர்களுக்கு தனி நுழைவாயில்
கட்டிடக் கலைஞர் பிமல் படேல் வடிவமைப்பில் உருவான நவீன நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் அடுத்த 150 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்
மக்களவை மற்றும் மாநிலங்களவையில், மொத்தம் 1,224 எம்.பி.க்கள் அமரும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன