ரூ. 13 கோடி மதிப்புள்ள சானியா மிர்சாவின் வீடு! புகைப்படங்கள் வெளியாகி வைரல்!
)
ஹைதராபாத்தில் உள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் ரூ.13 கோடி மதிப்பிலான வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. சோயிப் மாலிக்குடனான விவாகரத்துக்குப் பிறகு இந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்.
)
சானியா மிர்சா ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இந்த வீடு சகல வசதிகளும் கொண்ட பங்களாவாக கட்டப்பட்டுள்ளது.
)
ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் சானியா மிர்சாவின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் ஒவ்வொரு புளோரிலும் ஒவ்வொரு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
டென்னிஸ் போட்டிகளில் தான் வாங்கிய மெடல்கள் மற்றும் கோப்பைகளை வீடு முழுக்க அலங்கரித்துள்ளார் சானியா மிர்சா. இவை பார்ப்பதற்கே அழகாய் உள்ளன.
பாரம்பரிய நாற்காலிகள் சானியா மிர்சாவின் வீட்டில் பல உள்ளனர். மேலும் விண்டேஜ் சம்பந்தமான பல பொருட்கள் அவரது வீட்டில் உள்ளது.
சானியா மிர்சாவின் மகன் இசானுக்காக தனியாக அலங்கரிக்கப்பட்ட ஒரு குழந்தைகள் அறை வீட்டில் உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் இடம் பெற்றுள்ளது.
சானியா மிர்சாவின் அறை இஸ்லாமிய கையெழுத்து மற்றும் நாடாக்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த வீடும் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.