Bangladesh:பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்ட பிரான்ஸ் எதிர்ப்பு பேரணி
கடந்த வாரம் முதல் பங்களாதேஷில் தொடரும் பிரான்ஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெருகிக் கொண்டே சென்று இந்த எதிர்ப்பு போராட்டம் பிரம்மாண்டமான வடிவத்தை எடுத்திருக்கிறது. பிரான்ஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பிரம்மாண்டமான வடிவத்தை எடுத்துள்ளது
பங்களாதேஷில் இருக்கும் பிரான்சு நாட்டின் தூதரகத்தை மூட வேண்டும் என்று பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டனர்.
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை அனுமதிக்கும் மதச்சார்பற்ற சட்டங்களை பிரெஞ்சு அதிபர் ஆதரிப்பதை எதிர்த்து பங்களாதேஷின் வீதிகளில் இறங்கி இஸ்லாமியர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"டவுன் வித் பிரான்ஸ்" ("Down with France") மற்றும் "பிரஞ்சு தயாரிப்புகளை புறக்கணியுங்கள்" ("Boycott French Products") என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் உருவ பொம்மைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர்.
உலகில் உள்ள 2 பில்லியன் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்குமாறு நான் பிரெஞ்சு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று போராட்டக் குழுத் தலைவர் கோரிக்கை விடுக்கிறார்.
பங்களாதேஷில் இருக்கும் பிரான்சு நாட்டின் தூதரகத்தை மூட வேண்டும் என்று பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கேட்டுக் கொண்டதுடன், பிரதமர் பிரான்சைக் கண்டிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.