சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வரும் 139 நாட்கள் நஷ்டம், கஷ்டம்.. கவனம் தேவை
சனி வக்ர பெயர்ச்சி தாக்கம்: பொதுவாக சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தென்படும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது அதீத தொல்லைகளையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சனி வக்ர பெயர்ச்சி: இந்த நிலையில் ஜூன் 17 முதல் நவம்பர் 4 வரை சனி இந்த ராசியிலேயே வக்ர நிலையில் பெயர்ச்சி அடைவார். இந்த நேரத்தில், 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு கடினமாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், கண்டிப்பாக யாரிடமாவது ஆலோசனை பெறுங்கள். புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். காதல் உறவில் டென்ஷன் இருக்கும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவருடன் மனக்கசப்பு ஏற்படலாம். துறையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்ச்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் யாரிடமும் கடன் வாங்க வேண்டாம்.
மகர ராசி: இந்த ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். கடன் வாங்கினால் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். உங்கள் தாயின் உடல்நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலைப்படலாம். இதனுடன், மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.