பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!
சமீபத்திய ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இருநாடுகளுக்கும் இடையே உள்ள பகை காரணமாக இருதரப்பு தொடர்கள் நடைபெறுவதில்லை.
எனவே இரு அணிகளுக்கும் இடையே எப்போது கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றன. கடைசியாக டி20 உலக கோப்பையில் இரண்டு அணிகளும் விளையாடின.
பாகிஸ்தான் அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதின் பிறகு இரண்டு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
"எல்லோரும் இதனை விரும்புவார்கள். பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையேயான அரசியல் அனைவரும் நீண்ட காலமாக அறியப்பட்டவை. மேலும் இது எனக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது" என்று கோல்ட் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 17 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் நடந்தது. அதன் பிறகு ஒரு டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை.