தளபதி 67 முதல் அப்டேட் வெளியாகும் தேதி இதுதான்..! லோகேஷ் போட்டிருக்கும் மாஸ் பிளான்

Wed, 25 Jan 2023-2:30 pm,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் சூட்டிங் தொடங்கிவிட்டது.

 

கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மிஸ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

 

வாரிசு படம் முடித்தவுடன் தளபதி 67 படத்தின் சூட்டிங் தொடங்கியிருக்கும் நிலையில், அது குறித்த அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.

குடியரசு தினத்திற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜனவரி 26 தளபதி 67 அப்டேட் என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் பதிவுகளை போடத் தொடங்கினர்.

ஆனால், லோகேஷ் கனராஜ் அமைதி காத்து வருகிறார். குட்டி கிளிம்ஸூடன் சூப்பராக அப்டேட் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link