GOAT படம் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!

Wed, 07 Aug 2024-10:12 am,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் (The Greatest of All Time) படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

The Greatest of All Time படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடல்களை எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. 

 

ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய செலவில் The Greatest of All Time படத்தை தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான வேலைகளை பிசியாக பார்த்து வருகிறது. 

 

விஜய் படங்களில் பெரிதாக பேசப்படுவது படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தான். ஆனால் GOAT படத்திற்கு எந்த ஒரு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. 

 

The Greatest of All Time படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், கட்சியின் பெயரை எந்த இடத்திலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக பயன்படுத்தக் கூடாது என்று விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

 

The Greatest of All Time படத்தின் டிரைலர் வருமா ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.  இதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link