விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் ஆலோசனை கூட்டம்!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பணையூரில் உள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை கிழக்கு மாவட்டம், தூத்துக்குடி, நெல்லை, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தலைவர்களுடன் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதேப்போல் 6 மாவட்ட இளைஞரணி, தொண்டரணி நிர்வாகிகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் ஆலோசனை கூட்டத்தில் இடுபட உள்ளார். கடந்த 2 ம் தேதி நடிகர் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என கட்சியாக அறிவித்தார்.
கட்சி அரிவித்ததற்கு பின்னர் தொடர்ந்து நிர்வாகிகள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்கள். தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாவட்ட தலைவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்,மேலும் இளைஞரணி, தொண்டரணி உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து 2026 சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது அதற்கான பணிகள் என்ன என்ன, எப்படி பணியாற்ற வேண்டும் போன்ற ஆலோசனைகளை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் வழங்க உள்ளார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி ஆரம்பித்து முதல் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என நிர்வாகிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் கலந்து கொள்ளாதது நிர்வாகிகள் மத்தியும் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.