Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!!
பல நூறு ஆண்டுகளாக காணாமல் போகும் விமானங்கள் மற்றும் கப்பல்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ளது தான் 20 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு. டிசம்பர் மாதம் 20ம் தேதி காணாமல் போனது. அமெரிக்காவின் கடலோர காவல் படையினர் முழு வீச்சில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் 17,000 சதுர மைல்கள் அளவிற்கு சென்று தேடினர். எனினும் அந்த படகு இன்னும் கிடைக்கவில்லை.
15ம் நூற்றாண்டில் தொடங்கிய மர்மம் 20வது நூற்றாண்டு வரை நீடிக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள், சமீபத்தில், செயற்கை கோள் படங்களை ஆதாரமாக வைத்து, சில கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த முக்கோன பகுதியில் மேலுள்ள மேகங்கள் வெடிக்கின்றன என்றும், அதனால், 45 அடி அளவிற்கு அலைகள் எழும்புவதால், இதனை தாக்குபிடிக்க முடியாத கப்பல்களும் விமானங்களும் கடலுக்கடியில் போயிருக்க கூடும் என கூறுகின்றனர்.
பெர்முடா முக்கோண பகுதியின் எல்லைக்குள் வரும் போது, கப்பல்கள் மற்றும் விமானங்களின் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டு, தொடர்பை இழக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலர் இதற்கு கடலில் உள்ள அரக்கர்கள் காரணம் என்றும், இது வேற்றுகிரக வாசிகளின் வேலை என்றும் கூறுகின்றனர். இது குறித்து பல கருத்தியல்கள் நிலவுகின்றன. ஆனால், இன்றும் இந்த மர்ம முடிச்சு அவிழவில்லை என்பது தான் நிலைமை.
இதை சிலர் பாதாள உலகிற்கான கதவு என்கிறார்கள், இதை சிலர் இயல்பிற்கு மாறான மர்மமான பகுதி என்கிறார்கள். இது தொடர்பாக பல பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.