Lord Ram: இந்த முஸ்லீம் நாட்டில் கடவுள் ராமருக்கு அதிக பக்தர்கள் இருக்கும் காரணம் இதுவே!

Wed, 24 Nov 2021-11:45 am,

இஸ்லாமிய பெரும்பான்மை நாடாக இருந்தாலும், இந்தோனேசியாவின் பெரும்பாலான மக்கள் ராமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்  

இந்தோனேசியாவின் பெரும்பாலான மக்கள் ராமாயணத்தை தங்கள் இதயத்திற்கு நெருக்கமானதாக கருதுகின்றனர். இங்கு ராமரின் கதை காகவின் ராமாயணம்  (Kakawin Ramayana) ராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.  ராமாயணத்தை எழுதியவர் யோகேஷ்வர் கவிஞர் என்பது இந்தோனேஷியாவின் நம்பிக்கை. இந்நாட்டு ராமாயணத்தில் 26 அத்தியாயங்கள் உள்ளன.

இந்தோனேசியாவின் ராமாயணம் ராமரின் பிறப்புடன் தொடங்குகிறது. காகவின் ராமாயணத்தில், ராமரின் தந்தையின் பெயர் தசரதன் அல்ல, விஸ்வரஞ்சன். இந்தோனேசியாவின் ராமாயணம் பகவான் ராமர் பிறந்தவுடன் தொடங்குகிறது. 

சுமார் 23 கோடி முஸ்லிம்கள் வசிக்கும் இந்தோனேசியாவில், அந்நாட்டு அரசு 1973-ம் ஆண்டு சர்வதேச ராமாயண மாநாட்டை நடத்தியது. முஸ்லிம் நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட ஒரு நாடு, வேறொரு மதத்தின் புனித நூலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலகில் முதல் முறையாக பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு இந்தோனேசியா ஏற்பாடு செய்தது, .

இந்தோனேசியாவின் ராமாயணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு சிறப்பு வேறுபாடு உள்ளது, இந்தியாவில் அயோத்தியில் ராமர் பிறந்தார், இந்தோனேசியாவில் ராமர் பிறந்த நகரம் 'யோக்யா' என்று அழைக்கப்படுகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link