சேலையிலும் சிக்குனு இருக்கும் பிரியா மணி... புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்..!

Tue, 21 Jul 2020-7:51 pm,

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார், நடிகை பிரியாமணி. 

பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். இப்போது தெலுங்கில் ராணாவுடன் விரதபர்வம் 1992 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நக்சலைட்டாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ், கன்னடத்தில் உருவாகும் டாக்டர் 56 என்ற மெடிக்கல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். 

இந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில், அவர் மனைவியாக நடிக்கிறார். இந்தி வெப் சீரிஸான ஃபேமிலிமேனில் மனோஜ் பாஜ்பாய் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து அடீட் ( Ateet) என்ற புதிய வெப் சீரிஸில் நடிக்கிறார். இதில் அவர் ராணுவ வீரரின் மனைவியாக நடிக்கிறார். 

இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு இந்த லாக்டவுனில்தான் நீண்டநாள் குடும்பத்துடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார், ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை பிரியாமணி.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link