வைரத்தின் வைடூரியமான பொன்னான புதையலைப் பார்க்கலாமா? in pics

Thu, 12 Nov 2020-7:42 pm,

இந்த வைரம் ரஷ்யாவில் கிடைத்த வைரம். எங்குமே காணமுடியாத அசாதாரண ஊதா-இளஞ்சிவப்பு வண்ணம் கொண்ட The Spirit of the Rose வைரம். இந்த பெயரை மொழிபெயர்த்தால் ரோஜாவின் ஆவி என்று வருகிறது. இது ரோஜாவின் ஆவியோ இல்லையோ, இப்படியொரு வைரததை வாங்கிக் கொடு என்று பிடிவாதம் பிடித்தால் மனிதன் ஆவியாக அலைய வேண்டியது தான்...

பழங்காலத்தில் இந்தியாவிலிருந்துதான் வைரம் கிடைத்ததாக பாரம்பரியமான நம்பிக்கை உண்டு. இன்று உலகில் 96 சதவிகித வைரம் தென்னாப்பிரிக்காவிலிருந்தே கிடைக்கிறது. இது கச்சா வைரம்...

கார்பன் குடும்பத்தில் பிறந்த வைரம்  எண்முக முக்கோண வடிவம் கொண்டது. இதன் பளபளக்கும் ஒளியே வைரக்கல்லுக்கு உயிர்ப்பைக் கொடுக்கிறது.

இப்படி இருக்கும் வைரம் ஆபரணமாக நமது உடலில் ஜொலிப்பது எப்படி? அடுத்தடுத்த படங்களைப் பாருங்கள் வைரங்களே..

கார்பனின் இரண்டு புறவேற்றுமைத்திரிவுகள் வைரம் மற்றும் கிராஃபைட் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டுமே தனிமங்களே. தனிமத்தின் வடிவமாக இருந்தாலும், அமைப்பினால் வேறுபடுவதால் வைரம் மகுடத்தில் இடம் பிடிக்கிறது. 

 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழியைப் போலவே, கண்ணாடிக் கற்களும் வைரம் போலவே தென்படும். ஆனால் இது உண்மையில் வைரம் தான். 

இது ஒரிஜினல் வைரம் அல்ல, செயற்கை வைரம், கார்பன் குடும்பத்தில் இருந்து பிறக்கும் வைரம் இயற்கையானது, அதை செயற்கையாக தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இது சிந்தடிக் வைரம்.  

 

நவரத்தினங்களுள் ஒன்றான வைரம் இயற்கையில் காணப்படும் அனைத்து கற்களிலும் மிகவும் உறுதியானது, கடினமானது.  

சுரங்கம், ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் கச்சா வைரம், இறுதியில் இப்படி பெண்ணின் பொன்னுடலில் ஜொலிக்கிறது...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link