The Keto Diet: உடல் எடையை குறைக்க கீட்டோ டயட்டு பயனா?
குறைந்த கார்போஹைட்ரேட் கார்போஹைட்ரேட்டை உணவாக எடுத்துக் கொண்டு வந்தவர்கள் கீட்டோ டயட்டை ஆரம்பிக்கும் போது முதல் நாளில் 20 கிராம் அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதுமானது. ஒரு ஆப்பிளில் 25 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
கீட்டோ டயட் முறையில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது அதே நேரத்தில் போதுமான அளவு நீர் அருந்தவும் வேண்டும்.
கீட்டோ ப்ளூ கார்போஹைட்ரேட் லிருந்து கொழுப்பாக டயட்டை மாற்றும் போது உடம்பில் சில உபாதைகள் ஏற்படலாம். தசைகள் பிடிப்பு, வாந்தி, தலைவலி மற்றும் சோர்வு போன்றவை முதல் இரண்டு வாரங்களுக்கு (கீட்டோ ப்ளூ) தென்படலாம். இருந்தாலும் இது எல்லாருக்கும் ஏற்படுவதில்லை. இந்த டயட்டுக்கு நீங்கள் முழுவதுமாக தயாராக இல்லை என்றால் கொஞ்ச நாளைக்கு குறைந்த ஆற்றலை தரும் உணவுகளை எடுத்துக் கொண்டு வரலாம் என்று க்ளெவென்ஜெர் கூறுகிறார்.
உப்பை தவிருங்கள் அதிகமாக உப்பு சேர்க்காமல் இருப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளான பிரட், சிப்ஸ், குக்கீஸ், ரொட்டி போன்றவற்றில் அதிகமான உப்பு இருக்க வாய்ப்புள்ளது. எனவே கீட்டோஜெனிக் டயட் இருக்கும் போது உங்களுக்கு தேவையான உணவை போதுமான அளவு உப்பிட்டு தயாரித்து நீங்களே சாப்பிடுங்கள்.
காய்கறிகளை எடுப்பதில் கவனம் காய்கறிகளிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே கீரைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருங்கள். அதிகளவில் கார்போஹைட்ரேட் எடுத்தால் கீட்டோன் அளவு குறைந்துவிடும். எனவே சரியான அளவில் காய்கறிகளை எடுத்து கொள்ளுங்கள்.