Afghanistan: தாலிபான்களின் கொடூரத்திற்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் மக்கள்..!!
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியவுடன் தலிபான் போராளிகள் காபூலுக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ளனர்.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு பெரிய குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல்கள் உள்ளன. குண்டுவெடிப்பில் யாராவது காயமடைந்தார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. துப்பாக்கி சூடு காரணமாக, காபூல் விமான நிலையமும் தீப்பிடித்தது. (புகைப்படம்- PTI)
தலிபான்கள் பெண்களின் உரிமைகளை பறித்து அவர்களை அடிமையாக்கி ஒரு மிருகத்தனமான ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்தலாம் என்ற அச்சத்தில் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேற துடிக்கிறார்கள். (புகைப்படம்- IASS)
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலைக் கைப்பற்றிய பிறகு, காபூலில் முக்கிய இடங்களை தலிபான்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதே நேரத்தில், காபூலில் தலிபான்கள் நுழைந்த பிறகு, மக்கள் தங்கள் வீடுகளில் சிறைவைக்கப்பட்டனர். (புகைப்பட ஆதாரம் - ராய்ட்டர்ஸ்)
ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றினர். அல்-ஜசீரா செய்தி நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் தலைநகர் காபூலில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்குள் தலிபான் பயங்கரவாதிகள் நுழைவதைக் காட்டியது. (புகைப்பட ஆதாரம்- ட்விட்டர்)
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகளுக்காக அமெரிக்கா மற்றும் நேட்டோ பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்ட போதிலும், தலிபான்கள் வியக்கத்தக்க வகையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர். (புகைப்பட ஆதாரம் - ராய்ட்டர்ஸ்)
தலிபான் தலைவர் முல்லா பரதர் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியுடன் அதிகாரப் பரிமாற்றத்திற்காக பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, தலிபான்கள் சார்பில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 100 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் மோதலுக்கு பிறகு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். (புகைப்பட ஆதாரம்- PTI)
ஆப்கானிஸ்தானில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டினரும் போரால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேற முயன்றனர், இருப்பினும் காபூல் விமான நிலையத்தில் இருந்து பல விமான சேவை நிறுத்தப்பட்டு, விமானம் மூடப்பட்டதால் மக்கள் வெளியேர முடியாமல் தவிக்கின்றனர். (புகைப்பட ஆதாரம் - ராய்ட்டர்ஸ்)
தலிபான்கள் அதிபர் மாளிகையில் இருந்து ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து விட்டதாக அறிவித்து, அந்த நாட்டை 'ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்' என்று மறு பெயரிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தனது அரசாங்கத்தை இன்று அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. (புகைப்பட ஆதாரம் - ராய்ட்டர்ஸ்)
ஆப்கானிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு நிலைமை வேகமாக மாறிவருவதாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளது. (புகைப்பட ஆதாரம் - ராய்ட்டர்ஸ்)