மறைந்த பாடும் நிலா SP.பாலசுப்ரமணியனின் Throwback புகைபடங்கள்!!

Fri, 25 Sep 2020-2:24 pm,

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் மூலம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் காலமானார். அவர் உயிரிழந்ததை மருத்துமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 

கடந்த மாதம் 5ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக எஸ்.பி.பி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திரைத்துறையினர், பிரபலங்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அவர் பாடிய பாடலை ஒலிக்கவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். 

வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதை அடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன் உடல்நிலை சீராக தொடங்கியது.

இந்நிலையில் அவர் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. வியாழக்கிழமை அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் நேற்று நடிகரும், எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் மருத்துவமனை சென்று அவர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உயிரிழந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் செய்து தெரிவித்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link