ஆரோக்கியத்தை கெடுக்கும் இந்த 5 பழக்க வழக்கங்களை உடனே கைவிட்டு விடுங்கள்
நொறுக்குத் தீனி தவிர்த்தல் :
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை சூழலில் நொறுக்குத் தீனிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நொறுக்குத் தீனிகள் சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சோடியத்தின் அளவை உடலில் அதிகரிக்க செய்கின்றன. இவை புற்றுநோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தொற்று நோய் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கின்றன.
தூக்கமின்மை:
ஒவ்வொரு இரவும் 8-9 மணி நேரம் தூங்காமல் இருப்பது உடல் மற்றும் மன சோர்வுக்கு வழிவகுக்கும். போதிய தூக்கமின்மை மாரடைப்பு, அசாதாரண இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். இதில் அனைவரும் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை முறை:
நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தவறான வாழ்க்கை முறை உடலின் தசைகள் மற்றும் உறுப்புகளை பலவீனப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு, உடல் பருமன், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் எளிதாக பாதிக்கின்றன
கீரைகள் சாப்பிடுதல்:
கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவ வேண்டும் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், அதனை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை. கீரை சாப்பிடாதவர்களுக்கு வயிறு மற்றும் உடல் பிரச்சனைகள் ஏற்படும். தினமும் கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். கேரட், தக்காளி, வெங்காயம் போன்ற உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்.
உடற்பரிசோதனை:
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் இதனையே பரிந்துரைக்கிறனர். புற்றுநோய், சிறுநீரக நோய், இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களை சரியான நேரத்தில் கண்டறிதால் உரிய சிகிச்சை மூலம் குணமாகலாம். இதனை பலர் தவிர்க்கின்றனர்.