சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த உணவுகளுக்கு ஹலோ சொல்லுங்க.... சிறுநீரகம் சூப்பரா இருக்கும்
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த சில பிரத்யேக உணவுகள் உள்ளன. இந்த ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்திருக்கலாம். ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் இந்த உணவுகள் பற்றி கூறியுள்ளார். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
தினமும் சரியான அளவு தண்ணீரை உட்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இது சிறுநீரகங்களை சுத்தம் செய்யவும், நச்சுப் பொருட்களை அகற்றவும் உதவுகிறது.
துளசியில் பல மருத்துவ குணங்களுடன் பல இயற்கை எண்ணெய்களும் உள்ளன. இவை கற்களை உடைத்து சிறுநீரின் மூலம் உடலை விட்டு வெளியே அகற்றும். இதற்கு தினமும் 6-7 துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
இஞ்சியில் அதிக அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஆண்டி-ஆக்சிடெண்டுகளும் உள்ளன. இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இஞ்சியில் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இவை நச்சுப் பொருட்களை உடலில் இருந்து அகற்ற உதவுகின்றன.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளும் மிக முக்கியம். குறிப்பாக, பழங்களில் உள்ள நார்ச்சத்து சிறுநீரகத்தை பல நோய்களில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகளும் சிறுநீரக பாதுகாப்பில் உதவுவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
பொதுவாகவே பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகின்றன. இதில் தயிர் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உட்கொள்ளப்படுகிறது. தயிரில் உள்ள புரதம் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது பலருக்குத் தெரியாது. ஆகையால் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தயிர் சாப்பிடலாம்.
முள்ளங்கி சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும் காய்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை சிறுநீரகத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான அபாயங்களை குறைக்கின்றன.
தண்ணீரில் விளையும் மக்கானா மிகவும் சத்தான உணவாகும். இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. குறைந்த எண்ணெயில் இதை சமைத்து உட்கொள்வது சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.