மோசமான தலைமை பண்பை கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்!
ஒரு இடத்தில் மோசமான தலைமை இருந்தால், அது மொத்த அணியின் மன உறுதியையும், உற்பத்தித்திறனையும் பாதிக்கும். ஒரு தலைக்கு இலக்கு இல்லை என்றால் சரியான பாதையில் செல்ல முடியாது.
மோசமான தலைமைக்கு எடுத்துக்காட்டு, ஒருவிசயத்தை பற்றிய சரியான புரிதல் இருக்காது. அதே போல முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
ஒரு மோசமான தலைமை தனது அணியில் இருந்து வரும் கருத்துக்களை காதுகொடுத்து கேட்க மாட்டார்கள். அவருக்கு ஜால்றா அடிப்பவர்களை மட்டுமே உடன் வைத்து கொள்வார்கள்.
தனது அணி அல்லது நிறுவனத்திற்கு எது தேவை என்பதை கருத்தில் கொள்ளாமல், அவரின் தனிப்பட்ட விருப்புகளை மற்றவர்களுக்கு திணிப்பார்கள்.
ஒரு மோசமான தலைமையின் மற்றொரு அடையாளம், ஒவ்வொரு பணியாளரின் வேலையை கெடுப்பது ஆகும். ஏற்கனவே முடித்த வேலையில் குறையை கண்டுபிடிப்பது, தேவையில்லாமல் திட்டுவது போன்றவற்றை செய்வார்கள். இது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, படைப்பாற்றலை பாதிக்கும்.
மோசமான தலைமை அவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் தோல்விகளுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். மாறாக மற்றவர்களை குறை சொல்லியே தப்பிக்க முயற்சி செய்வார்கள்.