மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. எஃப்டிக்கு அதிக வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்
பேங்க் ஆஃப் பரோடா மூன்று வருட FDக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி அளிக்கிறது. இப்போது ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால் மூன்றாண்டுகளில் ரூ.1.26 லட்சமாக அதிகரிக்கும்.
ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.60 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இப்போது ரூ.1 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம், மூன்று ஆண்டுகளில் உங்கள் தொகை ரூ.1.25 லட்சமாக உயரும்.
HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை மூன்று வருட FD களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இங்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மூன்றாண்டுகளில் இந்தத் தொகை ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கும்.
கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.30 சதவீத வட்டியை வழங்குகிறது. இன்று இங்கு முதலீடு செய்தால் ஓராண்டில் ரூ.1.24 லட்சம் கிடைக்கும்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இப்போது முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக உயரும்.