இந்த வங்கிகள் சேவிங் கணக்கில் 7 சதவீதம் வரை வட்டி தருதாம்
தற்போது, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த சிறு நிதி வங்கியில் பராமரிக்க வேண்டிய சராசரி மாத இருப்புத் தொகை ரூ.2500 முதல் ரூ.10000 வரை இருக்கும். அதே சமயம், இந்த வங்கியில் 5 லட்சத்துக்கும் மேலான டெபாசிட்களுக்கு 7 சதவீதம் வட்டி விகிதமாக உள்ளது.
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கு 7 சதவீதம் வரை வருடாந்திர வட்டி விகிதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதற்கு டெபாசிட் தொகை ஐந்து லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். ரூ.1 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6% ஆகும்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்கள் 6 சதவீதம் வரை வருடாந்திர வட்டி பெறுகிறார்கள். இந்த வட்டி விகிதங்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும்.
இரண்டு வங்கிகளையும் போலவே, உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் (Ujjivan Small Finance Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் வசதியை வழங்குகிறது.
தற்போது, DCB வங்கியில் சேமிப்புக் கணக்கில் 6.5 சதவீத வட்டி விகிதம் உள்ளது. இந்த தனியார் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க, 2500 முதல் 5000 வரை வைத்திருக்க வேண்டும்.