ஷ்ஷ்... முத்தம் கொடுத்தால் ஆபத்து!! இந்த நோய்கள் வரலாம், ஜாக்கிரதை!!
சிபிலிஸ் என்பது ஒரு பாக்டீரியா தொற்று. இது பொதுவாக முத்தத்தால் பரவாது. இது வாய்வழி உடலுறவு மூலம் பரவுகிறது. சிபிலிஸ் வாயில் புண்கள் ஏற்படுகின்றது. முத்தம் மூலம் பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
சைட்டோமெகல்லோவைரஸ் என்பது உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலும் வாய்வழி மற்றும் பிறப்புறுப்பு தொடர்பு மூலம் பரவுகிறது.
சுவாச நோயான இன்ஃப்ளூயன்ஸா அல்லது காய்ச்சல், முத்தமிடுவதால் ஏற்படலாம். இந்த பிரச்சனையில் தசை வலி, தொண்டை தொற்று, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
முத்தமிடுவதால் ஹெர்பெஸ் பிரச்சனையும் வரலாம். பொதுவாக ஹெர்பெஸ் வைரஸ் இரண்டு வகைப்படும். HSV 1 மற்றும் HSV2. HSV 1 வைரஸ் எளிதில் பரவும். வாயில் சிவப்பு அல்லது வெள்ளை கொப்புளங்கள் அதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
உங்கள் ஜோடிக்கு ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனைகள் இருந்தால் முத்தமிடுவதால் உங்களுக்கும் இந்த பிரச்சனை உண்டாகும். ஆரோக்கியமான ஒருவருக்கு உமிழ்நீர் மூலம் பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்டால், ஈறுகளில் பிரச்சனை வரலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.