ஒரு ஆண்டில் 5 சதங்களை அடித்த இந்திய வீரர்கள் யார் யார்...? - முழு லிஸ்ட்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1996, 1998 ஆம் ஆண்டுகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்தார். ஓடிஐயில் அவரின் மொத்த சதம் 49.
முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி 2000ஆம் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் சதங்களை அடித்தார். அவர் மொத்தம் 22 ஓடிஐ சதங்களை அடித்துள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 1999ஆம் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்தார். டிராவிட் மொத்தம் 12 ஓடிஐ சதங்களை அடித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2012, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய 4 ஆண்டுகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, கோஹ்லி 47 ஓடிஐ சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, ரோஹித் சர்மா 30 ஒடிஐ சதங்களை அடித்துள்ளார்.
ஷிகர் தவான் 2013ஆம் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்துள்ளார். தவான் 167 போட்டிகளில் 17 ஓடிஐ சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ஒரு ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த 7ஆவது இந்திய வீரர் ஆனார். இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கில் இந்த ஆண்டின் 5வது சதத்தை பதிவு செய்தார்.