கிரிக்கெட் களத்தில் தோனியின் உற்ற நண்பர்கள்
)
தோனியின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர் ரெய்னா. இந்திய அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் என தோனியுடனேயே பயணித்தவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்போது கூட தோனி அறிவித்த நாளிலேயே தன்னுடைய ஓய்வையும் அறிவித்தார்.
)
இந்திய அணியில் இருவரும் ஒன்றாக விளையாடிய காலத்தில் இருந்து நெருக்கமாக இருக்கின்றனர் கோலியும், தோனியும். ஊடகங்களில் சலசலப்பு செய்தி வந்தாலும், இருவருக்குமான நட்பு இன்னும் தொடர்கிறது.
)
தோனி - ஜடேஜா தோழமை மிகவும் நெருக்கமானது. இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நண்பர்களாக பழகி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸின் ஆஸ்தான பிளேயராக ஜடேஜாவை மாற்றியவர் தோனி.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டூபிளசிஸ் விளையாடினார். அந்த அணியில் இருக்கும்போது அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.