இந்த வீரர்கள் BCCI grade A+ ஒப்பந்தத்தைப் பெறலாம், எவ்வளவு சம்பளம் தெரியுமா?
)
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுக்ல் (Lokesh Rahul), விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கணிசமான பங்களிக்கக்கூடும், ஆனால் பி.சி.சி.ஐ ராகுலின் சம்பளத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தற்போது, பி.சி.சி.ஐ ஒப்பந்த பட்டியலில் ஏ-கிரேடில் உள்ள லோகேஷ் ராகுலின் சம்பளம் ரூ 5 கோடி ரூபாய். பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தை ஏ + கிரேடுக்கு மாற்றினால் சம்பளமும் கூடும். Source: PTI
)
ரவீந்திர ஜடேஜா கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் ஒரு சிறந்த வீரராகவும் அருமையான ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்துள்ளார். டீம் இந்தியாவுக்கான அனைத்து வடிவங்களிலும் தனது பங்களிப்பைக் கொடுத்துள்ள ஜடேஜா, தற்போது Grade A ஒப்பந்தத்த்தில் இருக்கிறார். இந்த ஆண்டு இவரது ஒப்பந்தம் Grade A + என மேம்படுத்தப்படலாம்.
Source: PTI
)
அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) இந்திய அணியில் மிகவும் கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். தற்போது ரஹானே இந்திய டெஸ்ட் அணியின் உயிர்நாடியாக, தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார் என்பதில் சந்தேகமில்லை. விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அஜிங்க்யா ரஹானேவின் தலைமையில், இந்திய அணி மெல்போர்னில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இது தவிர, சிட்னி டெஸ்டில் அருமையாக பணியாற்றினார். ரஹானே, தனது உழைப்புக்கான வெகுமதியைப் பெறலாம். தற்போது, grade A-வில் இருக்கும் ரஹானே, 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தை ஏ + கிரேடுக்கு மாற்றினால் சம்பளமும் கூடும்.
Source: PTI
இந்திய அணியின் மற்றொரு திறமையான இளைஞர் யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal). லெக்-ஸ்பின்னரான சாஹலுக்கு 2020 டிசம்பர் மாதம் திருமணம் ஆனது. அந்த அதிர்ஷ்ட்ம் இந்த ஆண்டும் அவர், அணியின் அடுத்த கட்டத்திற்கு தரம் உயர்த்தப்படலாம். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சாஹல் அற்புதமாக விளையாடினார். தற்போது, அவர் பி.சி.சி.ஐயின் B grade ஒப்பந்த பட்டியலில் உள்ளார், ஆனால் விரைவில் அவர் ஏ + கிரேடில் சேர்க்கப்படலாம். அது உண்மையானால், ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவர், இனிமேல் 7 கோடி சம்பளம் பெறுவார்.
Source: PTI
ஹார்டிக் பாண்ட்யா (Hardik Pandya) கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில், அவர் ஒரு அற்புதமாக ஆடினார். T20 தொடரில் பாண்ட்யாவுக்கு 'மேன் ஆஃப் தி சீரிஸ்' விருது வழங்கப்பட்டது. தற்போது, அவர் பிசிசிஐ grade B ஒப்பந்தத்தில் இருக்கிறார். பி.சி.சி.ஐ Garde A + ஒப்பந்தத்தின் முன்னணி போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.
Source: PTI
இந்திய அணியின் முக்கிய வீரராக மாறிவிட்டார் முகமது ஷமி (Mohammad Shami), மேலும் அவர் ஜஸ்பிரீத் பும்ராவுடன் இணைந்து பந்து வீசும்போது அருமையான போட்டியை உருவாக்குகிறார். ஷமி சமீபத்திய காலங்களில் தனது திறமையால் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார். தற்போதைய ஒப்பந்த பட்டியலில் A grade-இல் இருக்கும் ஷமி, விரைவில் A + gradeஇல் இணைவதற்கான சாத்தியக்கூறு அதிகமாக உள்ளது.
Source: PTI