பூசணி விதை (ம) சூரியகாந்தி விதையில் கொட்டிகிடக்கும் அற்புத பலன்கள் !!
பூசணி விதைகளில் இருக்கும் ஜிங்க், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து உங்களின் பசியை கட்டுப்பாடாக வைத்திருக்கலாம். நம் உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவியாக இந்த பூசணி விதை உதவுகிறது. சூரியகாந்தி விதை உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க செய்ய உதவுகிறது எனக் கூறப்படுகிறது.
அதிகமானோர் மன உலைச்சளுக்கு ஆளாகிறீர்கள். இது உங்களின் உடல்நிலை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். ஆகையால் இந்த பூசணி விதையை தினமும் 4 அல்லது 5 விதை சாப்பிட்டு வருவதால் நல்ல தூக்கம் வரும். சூரியகாந்தி விதை ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையை சீராக்க உதவுகிறது. மேலும் பெண்கள் மாதவிடாய் உள்ளிட்ட கருப்பை கட்டிகள், பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பாதிப்புகள், கருப்பைப் பிரச்சனை மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை சரிசெய்ய உதவுகிறது எனக் கூறப்படுகிறது.
பெண்கள், ஆண்கள் இருவருக்கும் மிகப்பெரியப் பிரச்சனை முடிக் கொட்டுவது. இந்த முடிக்கொட்டுதல் ஏற்பட முக்கியக் காரணம் கால நேரம் பார்க்காமல் வேலைப் பார்ப்பது, ஒழுங்கான தூக்கம் இல்லமால் தொடர்ந்து வேலைப் பார்த்து வருதல். இதனால் உங்களின் முடி கொட்டுதல் அதிகமாகி நெத்தியில் சொட்டை விழுகின்றது. எனவே இந்த ஒரு விதை சாப்பிட்டால் உங்கள் முடிக் கொட்டுவது குறைந்துவிடும். சூரியகாந்தி விதைகளில் பொட்டாசியம், மக்னீசியம் உள்ளதால் உங்களின் முடிக் கொட்டுவதை தடுக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் உதவும் என சொல்கின்றனர்.
பூசணி விதை உங்கள் குடலில் ஏற்படும் செரிமானப் பிரச்சனைகள் மற்றும் ஏதேனும் செரிமானக் கோளாறு இருந்தால் இந்த விதை உங்களுக்கு உதவியாக இருக்கும். சூரியகாந்தி விதை தலைமுடி வளர்ச்சிக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் தேவையான வைட்டமின் எ, வைட்டமின் இ, புரதம், செலினியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்துப் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளது. நீங்கள் தினமும் சாப்பிட்டு வருவதால் தலைமுடி வளர்ச்சி, சரும ஆரோக்கியம், முகச்சுருக்கும் நீங்கும், முதுமை போன்றப் பிரச்சனைகள் குறைவும். சருமம் பளப்பளப்பாகும் எனக் கூறப்படுகிறது.
புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் இ, பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் தாதுச்சத்துகள் போன்றவை இந்த இரண்டு விதையில் நிறைவாக உள்ளது. இதனால் உங்கள் உடலில் இரத்த அழுத்தம் சீராகி, உடல் எடையைக் குறைக்க உதவும் எனக் கூறுகின்றனர். சூரியகாந்தி விதை இதயநோய் வரமால் தடுக்கவும், இதய ஆரோக்கியமாக இருக்கவும், உயர் அழுத்தம் குறைதல் போன்றவை சரிசெய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.
பூசணி விதை நம்முடைய இதய ஆரோக்கியத்தைக் காக்க மிகவும் உறுதியாக இருக்கும் என்று கூறுகின்றனர். சூரியக்காந்தி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது, இந்த விதையில் குளோ கிளைசெமிக் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயளிகளின் உடலின் சர்க்கரை அளவினை சீராக வைத்திருக்க இது உதவும் எனக் கூறப்படுகிறது.
பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துகள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடலை வழுவாக வைத்திருக்க உதவுகிறது.சூரியகாந்தி விதை உடலில் எழும்பு தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும், எழும்பு வழுவாகவும், மூட்டு வலி உள்ளிட்ட பல எழும்புப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது எனக் கூறப்படுகிறது.