முகத்தில் இப்படியெல்லாம் இருந்தா அது வயிற்று புற்றுநோயா கூட இருக்கலாம்!
கேஸ்ட்ரிக் வகை புற்றுநோய் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, குறிப்பாக முகத்தில் சிறிதாக குமிழ் போல தோன்றுதல், வீக்கம், தோல் உரிதல் மற்றும் அரிப்பு, எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுதல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
பசியின்மை, திடீரென்று உடல் எடையிழப்பு, வயிற்று வலி, வீக்கம், குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு போன்றவையும் இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு மற்றும் வாந்தியுணர்வு அல்லது ரத்தம் கலந்தோ அல்லது ரத்தம் கலக்கமலோ வாந்தியெடுத்தல், ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவு போன்றவையும் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமானால் அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் உணவு பொருட்கள், மனமூட்டப்பட்ட அல்லது இனிப்பு சுவையூட்டப்பட்ட துரித உணவுகளை தவிர்ப்பதோடு, உடற்யிற்சியும் செய்வது இந்நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.