முகத்தில் இந்த அறிகுறிள் இருக்கா? கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருக்கலாம், ஜாக்கிரதை
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், முகத்தில் சூடு அதிகரிக்கிறது. மக்கள் பெரும்பாலும் அதை சாதாரணமாக புறக்கணிக்கிறார்கள். இப்படி செய்வது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். முகத்தில் சூடு கட்டிகள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கொலஸ்ட்ராலும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், உங்கள் சருமத்தின் நிறம் மாற ஆரம்பிக்கிறது. கொலஸ்ட்ரால் காரணமாக, உங்கள் முகத்தின் நிறம் வெளிர் கருப்பு நிறமாக மாறத் தொடங்குகிறது. கண்களைச் சுற்றி சிறு மருக்களும் தோன்றத் தொடங்கும். இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
சிரோசிஸ் பிரச்சனை பல காரணங்களால் ஏற்படலாம். எனினும், அதிக கொலஸ்ட்ரால் காரணமாகவும், நீங்கள் இந்த பிரச்சனைக்கு பலியாகக்கூடும். இதன் காரணமாக, உடலில் வறட்சி ஏற்படுகிறது. மேலும் இதனால் உருவாகும் அரிப்பு காரணமாக இரத்தப்போக்கு ஏற்படலாம்.
முகத்தில் அதிகப்படியான அரிப்பு ஏற்பட்டால் அது உடலில் அதிக கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. உங்கள் முகத்தில் நீண்ட நாட்களுக்கு அரிப்பு மற்றும் சருமம் சிவக்கும் பிரச்சனை இருந்தால், அதை அலட்சியம் செய்யக்கூடாது.
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றிலும், முகத்தின் பிற பகுதிகளிலும் சிறிய சிவப்பு புள்ளிகள் ஏற்படலாம். இதை புறக்கணிக்க வேண்டாம். புறக்கணிப்பது ஆபத்தாக முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)