இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப்போகும் திரைப்படங்கள் !
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் ஏப்ரல்-7ம் தேதி நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.
ஆஷிக் அபு இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மலையாள மொழி திரைப்படமான 'நாரதன்' ஏப்ரல்-8ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.
தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான 'டாணாக்காரன்' திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இயங்குதளத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
பிரேம் இயக்கத்தில் ராணா நடிப்பில் வெளியான கன்னட மொழி திரைப்படமான 'ஏக் லவ் யா' ஜீ5 இயங்குதளத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.