இந்த வாரம் OTT-ல் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்!
பிப்பா (Pippa)
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் போர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி முதல் Amazon Prime வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
இருகபற்று (Irugapatru)
வெவ்வேறு பொருளாதார பின்னணியைச் சேர்ந்த மூன்று தம்பதிகளின் திருமண உறவில் ஏற்படும் சிக்கல்களையும், அதற்கான வழிகளையும் எடுத்து சொல்கிறது. நவம்பர் 6 முதல் நெட்ஃபிக்ஸ்-ல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
ரெயின்போ ரிஷ்டா (Rainbow Rishta)
இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும். சாத்தியமற்ற கனவுகளை நனவாக்க செய்யும் நபர்களின் கதை.
கூமர் (Ghoomer)
சயாமி கெர் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை Ghoomer. இந்த படம் அமேசான் பிரைமில் நவம்பர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும்.
லேபிள் (Label)
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ் லேபிள். இது நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.