கடலோரத்தில் அதிர்வலைகள்! சிதறிக் கிடக்கும் கடல் உயிரினங்களின் சடலங்கள்

Sat, 30 Oct 2021-5:55 pm,

இங்கிலாந்தின் கடற்கரையில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்களின் சடலங்கள் கிடக்கின்றன. இந்த கடல் உயிரினங்களின் சடலங்கள் மார்ஸ்கே முதல் சால்ட்பர்ன் வரையிலானகடற்கரை பகுதியில் சிதறிக் கிடக்கின்றன என டெய்லி ஸ்டார் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது.

 

ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் எப்படி இறந்தன என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் மாசுபாடு தான் இதற்கு காரணம் என பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.

மார்ஸ்கேயில் வசிக்கும் ஷரோன் பெல், என்பவர் இது குறித்து கூறுகையில் தினமும் கடற்கரைக்கு வருகிறேன் என்றும், கடந்த இரண்டு வாரங்களாக, கடற்கரையில் கடல்வாழ் உயிரினங்களின் சடலங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

நான் கடந்த 21 ஆண்டுகளாக மார்சேயில் வசித்து வருகிறேன் என்று ஷரோன் பெல் கூறினார். புயல், சூறாவளியின் போது கூட, கடற்கரையில் இது போன்ற மோசமான நிலை ஏற்பட்டதில்லை.

கடற்கரையில் கடல்வாழ் உயிரினங்களின் சடலங்களை கண்ட அப்பகுதி மக்கள் கொதிப்படைந்ததோடு, சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிராக குரல் எழுப்பினர். ஏராளமான அப்பாவி விலங்குகள் இறந்து கொண்டிருக்கின்றன, இதற்குப் பொறுப்பேற்கும் யாராவது இங்கு இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link