ரத்தசோகையைப் போக்கி ரத்தத்தை விருத்தி செய்யும் உணவுகள் பழங்கள் மற்றும் ஜூஸ்கள்
உணவில் இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்பதால், ரத்தம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் இரத்தக் குறைபாட்டை எளிதில் போக்கிவிடலாம்.
லிச்சி இரத்த உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. RBC உருவாவதற்குத் தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை லிச்சியில் உண்டு. எனவே, லிச்சியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ குடிக்கலாம்
பச்சை நிற காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் உடலில் ரத்த விருத்திக்கு உதவும். உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், இந்த சாற்றை தினமும் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் இரும்புச்சத்துடன் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் காப்பர் உள்ளது. இது உங்கள் உடலில் இரத்தத்தை வேகமாக அதிகரிக்கிறது. காய்கறிகளில் இருந்து ஜூஸ் தயாரிக்கும்போது, அதில் இனிப்புக்கு பதிலாக பேரிட்சையை சேர்த்துக் கொள்ளவும்
பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, எனவே இதை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை உடலில் உள்ள இரத்த சோகையை நீக்கும். சமைத்து உண்பதைவிட, பீட்ரூட்டை ஜூஸாக செய்து குடிப்பது அதிக நன்மைகளைத் தரும்
திராட்சைப்பழ ஜூஸ் உடலின் ரத்தத்தை அதிகரிக்கும்
ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால், ரத்த உற்பத்தி அதிகரிப்பதோடு வேறு பல சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்
தர்பூசணியை பழமாகவும், சாறாகவும் அருந்தினால் இரத்த விருத்தி ஆகும், ரத்தக் கட்டிகள் கரையும், உடலுக்கு தெம்பு கிடைக்கும்