திருப்பதி திருமலையில் பெண்கள் தலையில் பூ வைக்கக்கூடாது! தெரியுமா?
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையான் கலியுக பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் தரிசிக்கின்றனர். அங்கு வரும் பக்தர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதில் ஒன்று தான் தலையில் பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளக்கூடாது என்பதும். இது பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?
ஆம், பெண்கள் தலையில் பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளக்கூடாதாம். அதற்கு என்ன காரணம் என்றால், வெங்கடாஜலபதி மிகவும் அலங்கார பிரியர். எப்போதும் படோபடமாக இருக்க வேண்டும் என நினைப்பவர். மலர், ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்து எப்போதும் மிடுக்கான தோற்றத்துடன் இருப்பதையே விரும்புவார்.
அதனால், மலையில் இருக்கும் மலர்கள் அனைத்தும் வெங்கடாஜலபதிக்கே சொந்தம், சொந்தமாக இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான் யாரும் மலையில் பூ வைப்பதில்லை.
ஆனால் புராணங்களில் இதற்கு இன்னொரு கதை உண்டு. பழங்காலத்தில் வெங்கடாஜலபதிக்கு அலங்கரிக்கப்பட்ட மலர்களை பக்தர்களுக்கு வழங்கினர். அந்த மலர்களை மிகவும் புனிதமானதாக கருதினர்.பக்தியுடன் எடுத்து பெண்களின் தலையிலும், ஆண்களின் காதிலும் வைத்தார்கள்.
ஆனால் ஒருமுறை ஸ்ரீசைலபூர்ணுடு என்ற அர்ச்சகரின் பெண் சீடர் வெங்கடேஸ்வர ஸ்வாமியின் அலங்காரத்திற்குப் பயன்படும் மலர்களை கொண்டு அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். அன்றிரவு ஸ்ரீநிவாஸர் குருவின் கனவில் தோன்றி உமது சிஷ்யை பரிமளா உனக்குத் துரோகம் செய்துவிட்டாள் என்று கூறினார். அதன்பிறகு ஸ்ரீ ஷைலபூர்ணாவுக்குக் கோபம் வந்து, மலையில் பூ வைக்க தடை விதிக்கிறார்.
அத்துடன் இனி பூ வைக்கக்கூடாது என்று சிஷ்யைக்கு தடையும் விதிக்கிறார். அன்றிலிருந்துதான்... மலை உச்சியில் இருக்கும் மலர்ச் செல்வங்கள் அனைத்தும் வெங்கண்ணனுடையதாக இருக்க வேண்டும் என்ற விதி தொடங்கியது. அதுமட்டுமின்றி.. இறைவனுக்கு அலங்கரிக்கப்பட்ட மலர்களை பக்தர்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக மலர்க் கிணற்றில் போடும் வழக்கம் தொடங்கியுள்ளது.
இந்த வழக்கத்தை இப்போதும் பல பக்தர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இருப்பினும் நாளடைவில் இந்த பழக்க வழக்கத்தை மக்களே மறந்துவிட்டார்கள். காலப்போக்குக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பூ அலங்காரம் செய்து மங்களகரமாகவே ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.