திருப்பதி: பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது ஏன்?
இதுவரை ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆணவங்களை வைத்து ஆன்லைன் அல்லது இலவச டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்
ஆனால் இனிமேல் ஆதார் எண் இருந்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். இல்லையென்றால் ஏழுமலையானை தரிசிக்கும் டிக்கெட் உங்களுக்கு கிடைக்காது.
ஒருவர் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு, மலை நடைபாதை வழியாக வந்து மற்றொரு டிக்கெட் பெற்று குறிப்பிட்ட நேரத்திற்குள் இருமுறை சாமி தரிசனம் செய்வதை தடுக்க இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதற்கேற்ப தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதால் அதுவரை திவ்ய தரிசன டிக்கெட்டுகள் மலை நடைபாதையில் வழங்கப்படாது.
இனி திருப்பதி டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்தால் அல்லது நேரடியாக சென்று வாங்கினால் ஆதார் எண் வைத்துக் கொள்வது அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.