‘இந்த’ 5 தமிழக தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி முகம்! வெற்றி பெறப்போகிறவர்கள் யார்?

Tue, 04 Jun 2024-4:57 pm,

இந்தியா முழுவதும், நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடைப்பெற்றது. இதில், முதல் கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைப்பெற்றது. இதையடுத்து, கடந்த ஜூன் 1ஆம் தேதி தேர்தல் முடிந்து, கருத்து கணிப்புகளும் வெளியானது. 

அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில், தமிழகத்தை பொறுத்த வரை திமுக தான் நின்ற தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது. 

காலையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த வாக்கு எண்ணிக்கை, தற்போது மந்தமாக நடைப்பெற்று வருவதாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

திருவண்ணாமலையில் போட்டியிட்டவர்கள்

>அதிமுக+தேமுதிக கூட்டணி சார்பில் கலியப்பெருமாள் போட்டியிட்டார் >திமுக கூட்டணியில் அண்ணாதுரை போட்டியிட்டார் >நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ் பாபு போட்டியிட்டார் >பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிட்டார்

வெற்றி முகம் யாருக்கு?

திமுக கூட்டணியில் அண்ணாதுரை முன்னணியில் இருக்கிறது. 

தேனி:

தேனியில் மொத்தம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றது. 

வெற்றி முகம் யாருக்கு?

திமுக+இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன் இதில் முன்னனியில் இருக்கிறார். 

தென்காசி:

தென்காசியில் மொத்தம் 15,16,183 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் மட்டும் 7,42,158 பேர். பெண் வாக்காளர்கள் 7,73,822 பேர், மூன்றாம் பாலினத்தவர் 203 பேர் ஆவர். 

வெற்றிமுகம் யாருக்கு?

திமுக சார்பில் போட்டியிட்ட ராணிகுமார் இதில் முன்னனியில் இருக்கிறார்

தஞ்சாவூர்:

போட்டியிட்டவர்களின் விவரம்:

>முரசொலி-திமுக கட்சி >சிவனேசன்-தே.மு.தி.க >கருப்பு முருகானந்தம்-பாஜக கட்சி >ஹூமாயூன் கபிர்-நாம் தமிழர் கட்சி

வெற்றி பெற்றவர்: முரசொலி வெற்றி பெற்றிருக்கிறார்

வேலூர்:

வேட்பாளர்கள் பட்டியல்:

>திமுக-கதிர் ஆனந்த் >அதிமுக-பசுபதி >பாஜக(புதிய நீதிக்கட்சி)-ஏ.சி.சண்முகம் >நாம் தமிழர் கட்சி-தி.மகேஷ் ஆனந்த்

வெற்றிமுகம் யாருக்கு?

திமுக கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு வெற்றி முகம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link