Work From Home: உங்கள் லேப்டாப், கணிணி பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க சில Tips

Tue, 25 May 2021-6:29 pm,

கம்யூட்டர் மிகவும் பழையதாக இருந்தால், பொதுவாக, மிகவும் ஸ்லோவாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் வேகத்தை அதிகரிக்க அதன்  ஹார்ட்வேரை மாற்ற வேண்டும்.  இதற்காக, உங்கள் கணினி அல்லது லாப்டாப்பின் ரேம் (RAM) அதிகரிக்க வேண்டும். கூடுதலாக, கணினியின் ஆபரேட்டரின் சிஸ்டம் என்ன என்பதை அறிந்து கொண்டு, மிகவும் பழமையானதாக இருந்தால், அதற்கேற்ப வல்லுநரின் ஆலோசனை பெற்று அப்டேட் செய்ய வேண்டும்.

 

நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நாம் பொதுவாக ஸ்லீப் மோடில் வைத்து விடுவோம். அவ்வாறு செய்யாமல், அவ்வப்போது அதனை கணினியை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், கணினி பிரச்சனையை ஏற்படுத்தாமல் வேலை செய்யும். இந்த காரணத்திற்காக, உங்கள் லேப்டாப் அல்லது கணினியை தினமும் ரீ-ஸ்டார்ட்  செய்யுங்கள்.

அபரேடிங் சிஸ்டத்தை புதுப்பிக்கும் செய்தி அல்லது நோடிஃபிகேஷனை கவனிக்கவும். கணினியை அவ்வப்போது அப்டேட் செய்வது நல்லது.

நாங்கள் பயன்படுத்தாத சில சாப்ட்வேர்கள் அல்லது ஆப்கள்  லேப்டாப் அல்லது கணினிகளில் இருந்தால் அதனை அகற்றவும். அது அனாவசியமாக கணினியில் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கம்யூட்டரை செயல்திறனை ஸ்லோவாக்கும்.

அலுவலகத்தில் பணிபுரியும் போது, இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க,  ஐ.டி  துறை உடனே வந்து உதவும். ஆனால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, நாம் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link