Russia போராட்டத்தில் உள்ளாடைகளும், பனி விளையாட்டுக் கருவிகளும்

Mon, 01 Feb 2021-5:42 pm,

டிசம்பர் முதல் ரஷ்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீல நிற பாக்சர் ஜட்டிகளை கையில் ஏந்தியுள்ளனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? 

ஆகஸ்ட் மாதம் நோவிச்சோக் (Novichok nerve agent) கொடுத்து நவால்னி தாக்கப்பட்டார்.  பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் (Federal Security Service (FSB)) முகவர்கள் தனது நீல நிற உள்ளாடைகளில் நோவிச்சோக் நச்சை வைத்ததாக கூறுகிறார் Navalny.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த மாதத்தில் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை கொண்டாடும் ஆர்த்தடாக்ஸ் சடங்கை (Orthodox ritual) நீல நிற நீச்சல் உடைகளை அணிந்து பனியால் குளிர்ந்த நீரில் இருந்த புகைப்படங்கள் வெளியாகின. நவல்னியின் ஆதரவாளர்கள் புடின் தனது சிறந்த எதிரியின் உள்ளாடைகளில் விளையாடுவதாக கேலி செய்தனர்.

விஷத்திலிருந்து மீண்டு வந்த நவல்னி ஐந்து மாதங்கள் கழித்து ஜெர்மனியில் இருந்து   ரஷ்யாவுக்கு இந்த மாதம் திரும்பினார், நாட்டிற்கு வந்த உடன் அவர் உடனடியாக தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார்.  

பனி கருவிகள்: மாஸ்கோவில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், எதிர்ப்பாளர்கள் கலகப் பிரிவு போலீசாரையும், பனிப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தபப்டும் ஸ்டிக்குகளைக் கொண்டு FSB-க்கு சொந்தமான கார் ஒன்றையும் சேதப்படுத்தினார்கள். 

44 வயதான ஊழல் எதிர்ப்பு பிரச்சாரகர் வெகுஜன பேரணிகளுக்கு அழைப்பு விடுத்தார், ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையில் (Black Sea coast) ஆடம்பரமாக வைத்திருக்கு சொத்து குறித்த விசாரணை முடிவுகளை வெளியிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினார். அந்த சொத்து புடினுக்கு சொந்தமானது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

1.35 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டது இந்த சொத்து என்று நவால்னி கூறும் இந்த வளாகத்தில், நிலத்தடி பனி வளையம் முதல் கேசினோ என அனைத்துவிதமான ஆடம்பர வசதிகள் உள்ளன.  

சில நேரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. எதிர்ப்பாளர்கள் எஃப்.எஸ்.பி காரின் ஜன்னலை உடைத்து முழக்கங்களை எழுப்பினார்கள்.   பேரணிகள் தொடர்பாக 21 குற்றவியல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.   இதில் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அடங்கும்.

"சுதந்திரம், உண்மை, ரஷ்யா" மற்றும் "டவுன் வித் தி ஜார்" உள்ளிட்ட அரசியல் கோஷங்களுடன் அடையாளங்களைக் கொண்டிருந்த பனிமனிதர்களைக் கட்டியதற்காக நாடு முழுவதும் நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link