குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!

Sat, 25 May 2024-7:56 pm,

உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் இப்போது குழந்தை பிறப்பு விகிதம் என்பது, அதன் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது

கருவுறுதலுக்கும் பொருளாதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வளர்ந்த நாடுகளில் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம்  மிகவும் குறைந்துள்ள நிலையில், ஏழை நாடுகளில் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் மட்டும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது

பிறப்பு விகிதம் குறைவதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வயதான மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகை என்பது நாட்டில் உழைக்கும் சக்தியைக் குறைக்கும், அத்துடன் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். உற்பத்தி குறைந்துபோனால் நாட்டின் பொருளாதாரம் என்னவாகும்? அத்துடன் பணியாளர்கள் பற்றாக்குறையையும் எதிர்கொள்ள வேண்டும்.  

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, வரிச்சலுகைகள் மற்றும் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உட்பட தாராளமான குழந்தைப் பராமரிப்பு வசதிகளை வழங்குவது வழி என தெரிகிரது. அதோடு, குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கு நிறுவனங்கள், நெகிழ்வான வேலை நேரத்தை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

பெண்கள் கல்வி கற்று, பொருளாதார சுயசார்பு பெறுவதால், அவர்கள் வேலை செய்யவும் சம்பாதித்து சுயமாக வாழவும் விரும்புகின்றனர். அந்த சூழ்நிலையில், குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடுகின்றனர்.

பிறப்பு விகிதத்தை சமாளிக்க, பணியாளர்களின் பணிஓய்வு காலத்தை நீட்டிக்கலாம், அல்லது வெளிநாட்டில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுப்பது என்ற தெரிவுகள் உள்ளன. சிங்கப்பூர் நாட்டில் உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பணிஓய்வு காலத்தை நீட்டித்துள்ளது. தற்போது சிங்கப்பூரில் ஓய்வு பெறும் வயது 63 ஆக உள்ளது  

உலகளாவிய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.4 ஆக உள்ளது. இந்த விகிதம் 1950 இல் 4.7 என்ற விகிதத்தில் இருந்தது

குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட 10 நாடுகளின் பட்டியல் தைவான் 1.09 தென் கொரியா 1.11 சிங்கப்பூர் 1.17 உக்ரைன் 1.22 ஹாங்காங் 1.23 மக்காவ் 1.23 இத்தாலி 1.24 மால்டோவா 1.25 போர்ட்டோ ரிக்கோ 1.25 ஸ்பெயின் 1.29

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link