டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்கள் - முதலிடத்தில் சச்சின் இல்லை!

Thu, 25 Jul 2024-9:16 pm,

கிரிக்கெட்டில் டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்று ஃபார்மட்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு பார்மட்டிற்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உள்ளது. 

 

கிரிக்கெட்டின் ஆன்மா கொண்ட ஃபார்மட்டாக பார்க்கப்படும் டெஸ்டில் ஒரு பேட்டர் எத்தனை பந்துகளை சந்திக்கிறார் என்பதும் மிக முக்கியமான ஒன்று. 

 

அந்த வகையில், சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்களை இங்கு காணலாம். ஆனால், அங்குதான் ட்விஸ்ட். எல்லோரும் சச்சின்தான் முதலிடத்தில் இருப்பார் என நினைப்பார்கள். ஆனால், சச்சினையும் தாண்டி ஒருவர் அதிக பந்துகளை சந்திருக்கிறார். அவர் யார் என்பதை இந்த தொகுப்பின் கடைசி புகைப்படத்தில் பார்ப்பீர்கள்.

 

5. ஆலன் பார்டர்: ஆஸ்திரேலிய வீரரான இவர் 156 போட்டிகளில் 265 இன்னிங்ஸ்களை விளையாடி 11 ஆயிரத்து 174 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 205 ரன்களையும் அடித்துள்ளார். இவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் மட்டும் 27 ஆயிரம் பந்துகளை சந்தித்துள்ளார். 

 

4. ஷிவ்நரைன் சந்தர்பால்: மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான இவர், 164 போட்டிகளில் 280 இன்னிங்ஸ்களை விளையாடி 11 ஆயிரத்து 867 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 203 ரன்களையும் அடித்துள்ளார். இவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் மட்டும் 27 ஆயிரத்து 395 பந்துகளை சந்தித்துள்ளார்.

 

3. ஜாக் காலிஸ்: தென்னாப்பிரிக்க வீரரான இவர், இவர், 166 போட்டிகளில் 280 இன்னிங்ஸ்களை விளையாடி 13 ஆயிரத்து 289 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 224 ரன்களையும் அடித்துள்ளார். இவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் மட்டும் 28 ஆயிரத்து 903 பந்துகளை சந்தித்துள்ளார்.

 

2. சச்சின் டெண்டுல்கர்: இந்திய ஜாம்பவான சச்சின் மட்டும்தான் உலகளவில் 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் 248 ஆகும். அந்த வகையில், 329 இன்னிங்ஸ்களில் 15 ஆயிரத்து 921 ரன்களை குவித்த இவர் மொத்தம் 29 ஆயிரத்து 437 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். 

 

1. ராகுல் டிராவிட்: இந்திய அணி வீரரான இவர், இவர், 164 போட்டிகளில் 286 இன்னிங்ஸ்களை விளையாடி 13 ஆயிரத்து 288 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 270 ரன்களையும் அடித்துள்ளார். இவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் மட்டும் 31 ஆயிரத்து 258 பந்துகளை சந்தித்துள்ளார். அதாவது, சச்சினை விட ராகுல் டிராவிட் 1,821 பந்துகளை அதிகமாக சந்தித்துள்ளார். அதாவது ஏறத்தாழ 300 ஓவர்களுக்கும் மேல் சச்சினை விட அதிகமாக பேட்டிங் செய்திருக்கிறார் ராகுல் டிராவிட்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link