ரத்த சர்க்கரையை குறைக்கும் பானங்கள்! இஞ்சிக்கு மிஞ்சியது ஏதாவது உண்டா?
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பூஜ்ஜிய கலோரிகள் அல்லது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்ட பானங்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களின் விளைவு நீரிழிவு போன்ற ஒரு தீவிர நோயாகும். இந்த நோய் இப்போது எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. இது ஒரு அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் உடலை எங்கு, எப்போது, எப்படி பாதிக்கிறது என்று சொல்ல முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு, உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். உங்கள் தினசரி உணவில் சில ஆரோக்கியமான, குறைந்த கலோரி பானங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.
நீரிழிவு நோயின் பக்கவிளைவுகளை குறைக்க பானங்களை தொடர்ந்து பருக வேண்டும். சில பானங்களை பருகுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்த பானங்கள் உங்கள் எடையை அதிகரிக்காது என்பது இதன் சிறாப்பு. எனவே குளிர்காலத்தில் உங்கள் உணவில் எந்த ஆரோக்கியமான பானங்களை சேர்க்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.எனவே, தேநீர் தயாரிக்கும்போது, அதில் அதில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்க்கவும். இது உங்கள் டீயின் சுவையை அதிகரிப்பதோடு இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்தும்
கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், குளிர்காலத்தில், கிரீன் டீ மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. கிரீன் டீயிலும் இலவங்கப்பட்டையை சேர்க்கலாம், இது இரட்டிப்பு பலனளிக்கும்
குளிர்காலத்தில் தேநீர் அதிகமாக பருகுவது வழக்கம். ஆனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேநீர் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. எனவே, தேநீர் அருந்துவதற்கு பதிலாக பாதாம் பால் அருந்தலாம். சூடான பாதாம் பால் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வழக்கமான தேநீரிலும், பாலுக்கு பதிலாக பாதாம் பால் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம் பாலில் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இது தேநீருக்கு இயற்கையான இனிப்பையும் ஆரோக்கியத்தையும் வழங்கும். இந்த தேநீரின் சுவையை அதிகரிக்க, ஏலக்காய், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றையும் சேர்க்கலாம்.
வழக்கமான தேநீரில் இஞ்சியை சேர்த்து குடிப்பதும் நல்ல பலன் தரும். அதேபோல, இஞ்சி கசாயமும் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து பானமாக இருக்கும்
காய்கறிகளால் செய்யப்பட்ட சூப்கள், எப்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை. அதிலும், குளிர்காலத்தில் பசுமையான காய்கறிகள் கிடைக்கும் என்பதால், காயிகறிகள், தக்காளி என தினந்தோறும் பல்வேறு சூப்களை வைத்து குடிக்கலாம்