உடல் சூடால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
தற்போது உடலிலுள்ள வீக்கங்களை முற்றிலுமாகக் குறைத்து, சக்தியின் அளவை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கவும், சிறப்பான செரிமானம், மூட்டுக்களின் ஆரோக்கியம், சீரான எடைப் பராமரிப்பு ஆகியவற்றிற்கு உதவக்கூடியதுமான மேலும் 5 உணவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த உணவுகள் மொத்த உடல் ஆரோக்கியம் காக்க அனைவரும் உட்கொள்ளத்தக்கவை. குறிப்பாக முகப்பரு, சிரங்கு (Eczema) மற்றும் என்டோமெட்ரியோஸிஸ் (Endometriosis) எனப்படும் கருப்பை சம்பந்தப்பட்ட கோளாறு உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக்கூடியவை. அந்த 5 உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
* பாதாம் மற்றும் வால்நட் கொட்டைகளில் நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள், வெஜிடபிள் புரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. வால்நட்டில் கூடுதலாக ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உள்ளது.
இந்த சத்துக்கள் அனைத்தும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி கூறுகளை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இதனால் இதய நோய் மற்றும் சரும நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது; ஞாபக சக்தி அதிகரிக்கிறது; மூட்டுக்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
* ப்ளூ பெரியிலுள்ள பாலிஃபினால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் வீக்கங்கள் உருவாக உதவிபுரியும் பொருட்கள் உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்துகின்றன; செல் சிதைவை உண்டாக்கும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி செல்களைப் பாதுகாக்கின்றன.
* குயினோவா ரகத்தை சார்ந்த 'பக் வீட்' (Buck Wheat) எனப்படும் மரக் கோதுமையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் தாவர புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. குளுடன் ஃபிரீயான பக்வீட் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது.
இதிலுள்ள நார்ச்சத்து உடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்களே ஆன்டி இன்ஃபிளமேட்டரி வஸ்துகளின் உருவாக்கத்திற்குக் காரணிகளாகின்றன.
* கெஃபிர் என்ற தானியத்துடன் பால் சேர்த்து நொதிக்கச் செய்து அதிலிருந்து தயாரிக்கப்படும் பானம் கெஃபிர் (Kefir). இதில் உயிரோட்டமுள்ள நல்ல பாக்டீரியாக்கள் (Probiotics) அதிகம் உள்ளன. இவை நம் உடலின் ஜீரண மண்டல உறுப்புகளில் இருக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்கள் உடலில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
* எண்பத்தி ஐந்து சதவிகிதம் கோகோவும் குறைந்த அளவு சர்க்கரையும் கொண்டுள்ள டார்க் சாக்லெட் உடலுக்கு அதிசயிக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகளை அளிக்க வல்லது. இதிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள், மினரல்ஸ், நார்ச்சத்து மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணத்தினை உருவாக்க உதவும் தியோப்ரோமைன் (Theobromine) என்ற பொருள் ஆகியவை உடல் வீக்கங்களைக் குறைப்பது உள்ளிட்ட மொத்த ஆரோக்கியம் காக்க உதவுகின்றன.