சென்னையில் இப்படியெல்லாம் இடம் இருக்கிறதா? மறைந்திருக்கும் அதிசயங்கள்!
சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் விவேகானந்தர் இல்லமும் ஒன்று ஆகும். இது ஒரு அருங்காட்சியகமாகும், இங்கு அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.
சென்னை நகரின் மையப்பகுதியில் அமைத்துள்ள அழகிய தோட்டம் செம்மொழி பூங்கா. இந்த பெரிய, பசுமையான இடம் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு அரிய தாவரங்கள், அமைதியான நடைப்பயணம் மற்றும் இயற்கையை ரசிக்கலாம்.
கிண்டி தேசிய பூங்கா சென்னையில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பார்வையிடக்கூடிய ஒரு அழகான இடம் ஆகும். இது நகரத்தின் மையத்தில் அமைத்துள்ளது. மொத்தம் 2.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மான் மற்றும் பறவை போன்றவற்றை இங்கு காணலாம்.
தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னைக்கு அருகில் உள்ளது. இங்கு சிங்கங்கள், புலிகள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் வாழ்கின்றன.
சென்னையின் அழகிய கடற்கரையை புரோக்கன் பிரிட்ஜ் என்ற இடத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்த பாலம் அடையாறு ஆற்றின் அருகே உள்ளது. சூரியன் மறையும் போது கடல் இந்த இடம் அழகாக காட்சியளிக்கும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் சென்னையின் பழமையான மற்றும் பரபரப்பான மீனவர்கள் பணிபுரியும் இடமாகும். இங்கு தினமும் மீன் பிடித்து கொண்டு வருவதையும், பரபரப்பான கடலோர சமூகத்தின் வேடிக்கையையும் உற்சாகத்தையும் பார்க்க முடியும்.