ரூ. 25 ஆயிரத்திற்கு கீழ் மிரட்டும் வசதிகளுடன் ஸ்மார்ட்போன்... டாப் 5 மாடல்கள் இதோ!
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் புதிய பிராசஸர் மற்றும் பெரிய பேட்டரிகள் கொண்ட போன்கள் சந்தைக்கு வருகின்றன.
நீங்களும் இப்போது ஒரு புதிய போன் வாங்க திட்டமிட்டு, உங்களின் பட்ஜெட் சுமார் ரூ. 25 ஆயிரமாக இருந்தால், ஜூலை மாதத்தின் வெளியாகியிருக்கும் டாப் 5 லேட்டஸ்ட் மொபைல்கள் குறித்து இங்கு காணலாம். இந்த பட்டியலில் Realme, Xiaomi மற்றும் Motorola போன்ற நிறுவனங்களின் மாடல்களும் இடம்பெற்றுள்ளன.
POCO X5 Pro 5G: தற்போது, வாடிக்கையாளர்கள் இந்த போனை பிளிப்கார்ட் மூலமாக ரூ.20 ஆயிரத்து 999 விலையில் வாங்க முடியும். இந்த ஃபோன் Qualcomm Snapdragon 778G பிராசஸர், 108MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 6.67-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
Realme 11 Pro 5G: தற்போது வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டில் இருந்து இந்த ஸ்மார்ட்போனை ரூ.23 ஆயிரத்து 999 ஆரம்ப விலையில் வாங்க முடியும். இந்த ஃபோன் Dimensity 7050 பிராசஸர், 100MP முதன்மை கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது.
Lava Agni 2: வரும் ஜூலை 15 முதல் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து 21 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, Dimensity 7050 பிராசஸர் மற்றும் 66W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இருக்கும்.
Motorola G82 5G: வாடிக்கையாளர்கள் தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து 22 ஆயிரத்து 490 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் வாங்க முடியும். இந்த ஃபோன் Snapdragon 695 பிராசஸர், 5000mAh பேட்டரி, 50MP முதன்மை கேமரா மற்றும் 6.6-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
Redmi K50i 5G: தற்போது வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை Redmi நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.20 ஆயிரத்து 999 ஆரம்ப விலையில் வாங்க முடியும். இந்த போன் Dimensity 8100 பிராசஸர், 64MP முதன்மை கேமரா, 67W டர்போ சார்ஜ் மற்றும் 5080mAh பேட்டரியுடன் வருகிறது.