ஐபிஎல் 2022 -ல் அதிக தூரம் அடிக்கப்பட்ட 5 சிக்சர்கள்
)
பஞ்சாப் அணியில் விளையாடும் லியாம் லிவிங்ஸ்டோன் 117 மீட்டர் சிக்சர் விளாசி முதல் இடத்தில் இருக்கிறார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி ஓவரில் இந்த சிக்சரை விளாசினார்.
)
டெவால்ட் பிரெவிஸ் 112 மீட்டர் சிக்சரை விளாசியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் அவர், ராகுல் சாஹர் ஓவரில் இந்த மெகா சிக்சரை பறக்கவிட்டுள்ளார்.
)
3வது இடத்திலும் லியாம் லிவிங்ஸ்டோன் இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகேஷ் சவுத்திரி வீசிய ஓவரில் 108 மீட்டர் சிக்சரை பறக்கவிட்டார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 108 மீட்டர் சிக்சரை பறக்கவிட்டுள்ளார். அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சிக்சரை விளாசினார்.
107 மீட்டர் சிக்சரை ஜாஸ் பட்லர் விளாசியிருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் தாக்கூர் வீசிய ஓவரில் இந்த சிக்சரை அடித்துள்ளார்.