உலகின் சக்திவாய்ந்த டாப் 5 ராணுவ படைகள்!

Tue, 08 Mar 2022-6:41 am,

1) அமெரிக்கா : 

உலகின் சிறந்த ராணுவ படைகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிப்பதில் சிறிதும் ஆச்சர்யமில்லை.  களத்தில் 1,400,000 எண்ணிக்கையில் வலிமையான வீரர்களை கொண்டுள்ளது.  மேலும் 2,085 போர் விமானங்கள், 967 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 945 போக்குவரத்து மற்றும் 742 சிறப்பு பணி விமானங்கள், 39,253 அர்மோர்ட் வாகனங்கள், 91 டெஸ்டராயர்ஸ் கப்பல்கள், 20 விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது. 

2) ரஷ்யா : 

எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவை விட அதிக டாங்குகளை ரஷ்யா ராணுவ படை கொண்டுள்ளது.  உலகின் சிறந்த ராணுவ படைகளின் வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கும் ரஷ்யாவில் 1,013,628 எண்ணிக்கையில் வலிமையான வீரர்கள் உள்ளனர்.  27,038 அர்மோர்ட்  வாகனங்கள், 6,083 யூனிட் பீரங்கி, 3,860 ராக்கெட் புரொஜெக்டர்கள், 873 போர் விமானங்களள், 531 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 62 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 48 சுரங்கப் போர்க் கப்பல்களை கொண்டுள்ளது. 

3) சீனா : 

உலகில் வலிமையான வீரர்களை கொண்டுள்ள சீனா, அமெரிக்காவிற்கு எதிராக தயாராகி வருகிறது.  2,183,000 எண்ணிக்கையில் வலிமையான வீரர்களை கொண்டு உலகின் சிறந்த ராணுவ படைகளின் வரிசையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.   33,000 அர்மோர்ட் வாகனங்கள், 3,500 டாங்குகள், 1,232 போர் விமானங்கள், 281 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 74 நீர்மூழ்கிக் கப்பல்கள், 52 போர் கப்பல்கள் மற்றும் 36 டெஸ்ட்ராயர்ஸையும் கொண்டுள்ளது. 

4) இந்தியா : 

இந்தியா தனது ஆயுதப் படைகளில் 1,444,000 எண்ணிக்கையில் வலிமையான வீரர்களை கொண்டு உலகின் சிறந்த ராணுவ படைகளின் வரிசையில் நான்காவது இடத்தை வகிக்கிறது.  4,292 டாங்குகள், 4,060 இழுத்துச் செல்லப்படும் பீரங்கிகள் மற்றும் 538 போர் விமானங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.  இந்த ஆண்டு இந்தியா தனது ராணுவத்திற்காக $61 பில்லியன் செலவழிக்க உள்ளது. 

5) ஜப்பான் : 

247,160 எண்ணிக்கையில் வலிமையான வீரர்களை கொண்டு ஜப்பான் ஐந்தாவது இடத்தை பிடித்து இருக்கிறது.  இது 3,130 அர்மோர்ட் வாகனங்கள், 1,004 டாங்குகள் மற்றும் 119 தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link