இந்திய மார்க்கெட்டில் இருக்கும் டாப் 5 ஸ்பீடு பைக்குகள்..!
Husqvarna Svartpilen 401 46hp: புதிய ஜென்-2 ஹஸ்க்வர்னா மாடல்கள் மூலம் , முந்தைய பைக்குகளில் இருந்த தனித்துவமான பிரச்சனைகளை பஜாஜ் தீர்த்து வைத்துள்ளது. ரூ. 2.92 லட்சத்தில் கிடைக்கும், Svartpilen 401 ஆனது சில மின்னணு அம்சங்கள் இல்லாமல் மிகவும் நுட்பமான மற்றும் கம்பீரமான 390 டியூக் மாடலை சார்ந்துள்ளது.
Honda CB300R 31hp: இந்திய சந்தையில் CB300R எப்போதுமே குறைவாக மதிப்பிடப்பட்ட பைக்காகவே இருந்து வருகிறது. ஆனால் அதன் திருத்தப்பட்ட விலையான ரூ.2.40 லட்சத்துடன், முன்பை விட இப்போது அதன் போட்டியாளர்களுக்கு CB300R கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 146 கிலோ கர்ப் எடை (KTM 125 டியூக்கை விடவும் இலகுவானது!) கொண்டுள்ள இந்த வாகனத்தில், 286cc, single-cylinder, liquid-cooled DOHC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
TVS Apache RTR 310 35.6hp: 312சிசி மோட்டாரை கொண்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 310 ஆனது, அப்பாச்சியின் மிக சக்திவாய்ந்த வாகனமாக உள்ளது. இது 35.6எச்பி ஆற்றலை உருவாக்குகிறது. மிகப்பெரிய Apache ஆனது அதன் அடிப்படை தோற்றத்தில் கூட மிகவும் சிறப்பம்சங்கள் நிறைந்த பைக் ஆக உள்ளது. இதன் விலை ரூ.2.43 லட்சம். என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
KTM 390 Adventure X 43.5hp: ரூ.2.80 லட்சத்தில் 390 அட்வென்ச்சர் எக்ஸ், கேடிஎம்-ன் முழு 390 லைன்-அப்பில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மாடலாகும். இது இன்னும் பழைய 373சிசி இன்ஜினையே பயன்படுத்துகிறது. இது 43.5hp மற்றும் 37Nm டார்க்கை உருவாக்குகிறது. எந்த எலக்ட்ரானிக் ரைடர் உபகரணங்களும் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற 390களில் காணப்படும் ஃபேன்சியர் TFT யூனிட்களுக்குப் பதிலாக ஒரு எளிய LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ. 3 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் அதிகபட்ச சக்தி மற்றும் திறன் வாய்ந்த பைக்கை வாங்க விரும்பினால், 390 அட்வென்ச்சர் எக்ஸ் சரியான தேர்வாக இருக்கும்.
Triumph Scrambler 400 X 40hp: பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டாண்மையில் இருந்து வெளிவரும் இரண்டாவது தயாரிப்பு ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல் மோட்டார்சைக்கிள். ஸ்பீடு 400 உயரமான, அதிக விசாலமான மற்றும் லேசான ஆஃப்-ரோடிங்கை எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டது. அதேநேரம், ரூ. 2.63 லட்சம் மதிப்பில் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் அற்புதமான மதிப்புகளை பெற்றுள்ளது. இதில், 398.15 cc air-cooled engine வழங்கப்பட்டுள்ளது.