இந்த உலகக் கோப்பையின் டாப் 5 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்தான்... லிஸ்டில் 2 இந்தியர்கள்
ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் 13ஆவது தொடர் இந்தியாவில் வரும் அக். 5ஆம் தேதி தொடங்கி, நவ. 19ஆம் தேதி வரை என மொத்தம் 45 நாள்கள் நடைபெற உள்ளது.
10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கும் நிலையில், ஒவ்வொரு அணிக்கும் தலா 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, இந்த தொடரில் விளையாடும் 150 வீரர்களில் மிக பணக்காரர்களான 5 வீரர்களை இதில் காணலாம்.
Mitchell Starc: ஆஸ்திரேலிய அணியின் இடது வேகப்பந்துவீச்சாளரும், நட்சத்திர வீரருமான மிட்செல் ஸ்டார்க்கின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. இவர் இந்த பட்டியலில் கடைசி இடமான 5ஆவது இடத்தை பிடிக்கிறார்.
Steve Smith: இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்தை பிடிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என மதிப்பிடப்படுகிறது.
Rohit Sharma: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் சுமார் ரூ. 120 கோடி அளவிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.
Pat Cummins: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அபரிமிதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடி என கணக்கிடப்படுகிறது.
Virat Kohli: விராட் கோலி இந்த உலகக் கோப்பையிலேயே விளையாடும் பணக்கார வீரர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 950 கோடி என கூறப்படுகிறது.