மலைகளுக்கு இடையே செல்லும் இந்தியாவில் உள்ள 5 அழகிய ரயில்கள்!

Sat, 02 Jul 2022-8:10 pm,

கல்கா-சிம்லா ரயில் பயணம் குறிப்பாக குளிர்காலங்களில் சிறப்பாக இருக்கும், கிராமப்புறங்கள் பனி படர்ந்து பார்க்க அழகாக இருக்கும்.  கல்கா மற்றும் சிம்லா இடையே, கல்கா-சிம்லா ரயில் பாதை மிகவும் மலைப்பாங்கான பகுதி வழியாக செல்கிறது, இது பள்ளத்தாக்கு, மலைகள், நகரங்களின் அற்புதமான காட்சிகளை நமது கண்களுக்கு விருந்தாக்குகிறது.

 

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை, நீலகிரி மலை ரயில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஆழமான காடுகள் மற்றும் பசுமையான தோட்டங்கள் வழியாக பயணிகளை கொண்டு செல்கிறது.  நீலகிரி மலை ரயில் பயணம் கவர்ச்சிகரமான நீண்ட பயணம் அற்புதமான காட்சிகளை காண்பிக்கிறது.

 

நெரலில் இருந்து மாதேரன் வரையிலான இந்த ரயில் பயணம், பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை கண்முன் நிறுத்துகிறது.  மேலே மலைகள், கீழே சமவெளிகள் கொண்ட பசுமையான காடுகளின் வழியாக பயணிக்கும் அற்புதமான பயணத்தை வழங்குகிறது.  இந்த பொம்மை ரயிலில் சுமார் 100 பேர் அமரும் வசதி உள்ளது.

 

பதான்கோட்டில் இருந்து ஜோகிந்தர் நகர் வரை, ரயில் பாதை உங்களை இமாச்சலத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கின் துணை இமயமலைப் பகுதி வழியாக, வியக்கவைக்கும் அழகான மலைகளை காண  அழைத்துச் செல்கிறது.  நீங்கள் ஈர்க்கக்கூடிய கோட்டைகள், பிரமிக்க வைக்கும் கோவில்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பைன் மரங்களை வழியில் காணலாம்.

 

டார்ஜிலிங் இமயமலை ரயில், டார்ஜீலிங் பொம்மை ரயில் என்றும் அழைக்கப்படுகிறது.  இது நியூ ஜல்பைகுரியிலிருந்து, டார்ஜிலிங்கிற்குச் சென்று பனிமூட்டமான இமயமலை மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்கள் வழியாக செல்கிறது.  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில் மலை நகரத்தின் வழியாக ராங்டாங், குர்சியோங், கும் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சுழல்களில் செல்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link