இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் டாப் 5 எஸ்யூவி கார்கள்

Fri, 27 May 2022-10:34 am,

ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்:ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் வென்யூ, புதிய ரோலுடன் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. இணையத்தில் லீக்காகியிருக்கும் புகைப்படங்களில் பெரிய டஸ்கன் கவர்ச்சிகரமாக உள்ளது. புதிய LED DRL தொகுப்புடன், முன்பக்கத்தில் கிரில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இரு முனைகளிலும் புதிய பம்ப்பர்கள் காணப்படும். புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய டெயில் லேம்ப்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

சிட்ரோயன் சி3: பிரெஞ்சு நிறுவனம் சப் காம்பாக்ட் SUV-ஐ அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இது செப்டம்பர் 2021-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காலதாமதம் காரணமாக 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Citroen C3 மாடல் காரில் பம்பர் பொருத்தப்பட்ட மூடுபனி விளக்குகள், வெள்ளி நிற ஹெட்லைட்கள், கருப்பு நிற பி-பில்லர்கள், இண்டிகேட்டர் பொருத்தப்பட்ட ORVM-கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவை இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் டர்போசார்ஜர் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

ஹூண்டாய் டியூசன்: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் விரைவில் இந்திய சந்தையில் அனைத்து புதிய டக்ஸனை அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது. டியூசன் கார் டீ மற்றும் பிளக்-இன் ஹைப்ரிடில் உள்ளிட்ட இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கும். பெட்ரோல் சலுகைகளில் 2.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் மோட்டார் மற்றும் 1.6 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் ஆகிய வேரிடயண்டுகள் இருக்கும். டீசல் எஞ்சின் விருப்பத்தில் 1.6 லிட்டர் CRDi யூனிட் மற்றும் 2.0 CRDi யூனிட்கள் ஆகியவை கிடைக்கும். 

விட்டாரா பிரெஸ்ஸா: மாருதி சுஸுகி தனது பிரெஸ்ஸா சப்காம்பாக்ட் எஸ்யூவியை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். காரின் பெயரிலிருந்து விட்டாரா நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 1.5 லிட்டர், பெட்ரோல் என்ஜினில் ப்ரோக்ரசிவ் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இயங்கும். டிரான்ஸ்மிஷன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் கையாளப்படும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என்: மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும். ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கார் இண்டு எஞ்சின் வகைகளுடன் வெளியாகும். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் வெளியாகும் இந்தக் கார்  XV700 வகைகளைப் போன்றதாக இருக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link